மேலும் செய்திகள்
வருவாய் துறை அலுவலர்கள்கண்டன ஆர்ப்பாட்டம்
19-Feb-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வணிகவரி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. வணிகவரி துணை ஆணையர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில வரி அலுவலர் சக்திவேல் பேசினார். இதில் தேவையற்ற அறிக்கைகள் மற்றும் ஆய்வு கூட்டங்களை நடத்துவதை தவிர்க்க வேண்டும்; அனைத்து கோட்டங்களிலும் சட்டப்பிரிவை ஏற்படுத்த வேண்டும்; துறை மறுசீரமைப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
19-Feb-2025