உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தி.மு.க., ஆலோசனை கூட்டம்

தி.மு.க., ஆலோசனை கூட்டம்

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட அவைத் தலைவர் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மலையரசன் எம்.பி., ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், ஆறுமுகம், ராஜவேல், வைத்தியநாதன், முருகன், வசந்தவேல், நகர செயலாளர்கள் துரை, டேனியல்ராஜ் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர் வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., கட்சி பணி மேற்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கி பேசினார்.கூட்டத்தில் உளுந்துார் பேட்டை நகர மன்றதலைவர் திருநாவுக்கரசு, ஒன்றிய சேர்மன்கள் அலமேலு ஆறுமுகம், திலகவதி நாகராஜன், சாந்தி இளங்கோவன், பேரூராட்சி சேர்மன் ரோஜாரமணி, ஒன்றிய துணைச் சேர்மன் அலெக்சாண்டர், இளைஞரணி நிர்வாகிகள் உட்பட பலர்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை