உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிணற்றில் மூழ்கி முதியவர் பலி

கிணற்றில் மூழ்கி முதியவர் பலி

சின்னசேலம்; சின்னசேலத்தில் விவசாய கிணற்றில் மூழ்கி முதியவர் உயிரிழந்தார்.சின்னசேலம் அடுத்த ஈயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி, 70; இவர் வீட்டை விட்டு வெளியேறி கனியாமூர் பஸ் நிறுத்தத்தில் தங்கி பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார். நேற்று காலை 8:30 மணி அளவில் அம்சாகுளம் அருகே, பூமாலை என்பவருக்கு சொந்தமான, விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மிதந்தார். தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ