உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மழையில் வீணான நெல் விவசாயிகள் மறியல்

மழையில் வீணான நெல் விவசாயிகள் மறியல்

உளுந்துார்பேட்டை,: திருநாவலுார் அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உளுந்தூர்பேட்டை தாலுகா கூ. கள்ளக்குறிச்சி கிராமத்தில் ஆண்டுதோறும் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அறுவடை காலங்களில் துவங்கப்பட்டு செயல்படும். தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்படாமல் உள்ளது. இதை நம்பி அங்கு விவசாயிகள் நெல்லை விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென மழை பெய்ததால் விற்பனைக்காக வைத்திருந்த, 200க்கும் மேற்பட்ட மூட்டை நெல் குவியல்கள் நனைந்து வீணானது. அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்க வலியுறுத்தி, நேற்று காலை 7:30 மணிக்கு சேந்தநாடு-உளுந்தூர்பேட்டை சாலையில் 'திடீர்' மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து காலை 8:00 மணிக்கு மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !