உள்ளூர் செய்திகள்

பெண் தற்கொலை

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே வயிற்று வலியால் பெட்ரோல் பங்க் உரிமையாளரின் மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உளுந்துார்பேட்டை தாலுகா மடப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் குமார். பெட்ரோல் பங்க் உரிமையாளர். இவரது மனைவி சுபா 45. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 31ம் தேதி வயிற்றுவலி அதிகமானதால் சுபா வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி சுபா பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்குந் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி