மேலும் செய்திகள்
லாரி மோதி முதியவர் பலி
24-Feb-2025
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கச்சிராயபாளையம் அங்காள பரமேஸ்வரி கோவிலில், மயான கொள்ளை திருவிழா கடந்த பிப். 22, ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு,இரவு நேரங்களில் வீதி உலா நடந்தது. தொடர்ந்து மயான கொள்ளை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மாலை கோமகி ஆற்றங்கரையில் தீ மிதி வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
24-Feb-2025