மேலும் செய்திகள்
இலவச கண் சிகிச்சை முகாம்
07-Aug-2024
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவ மையம் சார்பில் டி.எம்.பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, ரோட்டரி தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் சங்கர் வரவேற்றார். முன்னாள் தலைவர்கள் முத்துக்கருப்பன், ராஜேந்திரன், சுதாகரன், சுரேஷ், நடராஜன், முன்னாள் தலைவர் அருணாசலம் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி அம்மன் எலக்ட்ரிகல்ஸ் குமரேசன் முகாமை தொடங்கி வைத்து மருத்துவ அடையாள அட்டையை வழங்கினார்.முகாமில் கோவை சங்கரா கண் மருத்துவ மைய டாக்டர்கள் குழுவினர் 160 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் 55 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு கோவை அழைத்துச் செல்லப்பட்டனர்.
07-Aug-2024