மேலும் செய்திகள்
சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
17-Aug-2024
சங்கராபுரம்: எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் பொது தேர்வில் சாதித்த மாணவ,மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை முல்லைமணி தலைமை தாங்கினார்.உதவி தலைமை ஆசிரியர் இளையராஜா வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக ஊராட்சி மன்ற தலைவர் தனகோட்டி,துணை தலைவர் ராஜகோபால்,பி.டி.ஏ. தலைவர் அண்ணா அறிவுமணிபள்ளி மேலாண்மை குழு தலைவர் சுதா ஆகியோர் பங்கேற்று பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதித்த மாணவ,மாணவிகளுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினர்.விழாவில் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள்.ஊர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.ஆசிரியர் கோமதுரை நன்றி கூறினார்.
17-Aug-2024