மேலும் செய்திகள்
மது பாட்டில் விற்றவர் கைது
27-Feb-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில், குட்கா பொருட்கள் விற்கப்பட்டு வந்தன. இந்நிலையில், சப் இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அங்கு சோதனை செய்தனர். அப்போது தென்கீரனுார், அண்ணாநகரைச் சேர்ந்த குமார், 57; என்பவர், தனது பெட்டிக் கடையில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்றது தெரிந்தது. இதனையடுத்து குமாரை கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
27-Feb-2025