உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தும்பை ஆற்றில் ரூ.6 கோடியில் உயர்மட்ட பாலம் பணிகள் ஜரூர்

தும்பை ஆற்றில் ரூ.6 கோடியில் உயர்மட்ட பாலம் பணிகள் ஜரூர்

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலை பகுதி தும்பை கிராமம் உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே பல ஆண்டாக தரை பாலம் இருந்து வந்தது. மழை காலங்களில் தரை பாலத்தில் அதிக அளவில் வெள்ள நீர் செல்வதால் பொது மக்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனர்.இந் நிலையில் கல்வராயன்மலை தும்பை கிராமத்தில் உள்ள ஆற்றில் உயர்மட்ட பாலம் அமைத்து தரும்படி சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்ததன் பேரில் ரூ. 6 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்க தமிழக முதல்வர் உத்திரவிட்டார்.இதையொட்டி தும்பை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை