உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கைலாசநாதர் கோவில் புனரமைப்பு பணி எம்.எல்.ஏ., உதவி ஆணையர் ஆய்வு

கைலாசநாதர் கோவில் புனரமைப்பு பணி எம்.எல்.ஏ., உதவி ஆணையர் ஆய்வு

உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டை கைலாசநாதர் சுவாமி கோவில் புனரமைப்பு பணிகளை எம். எல்.ஏ., அறநிலையத் துறை உதவி ஆணையர் ஆய்வு செய்தனர்.உளுந்துார்பேட்டை காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் சுவாமி கோவில் ரூ. 47 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை உளுந்துார்பேட்டை எம்.எல்.ஏ., மணிக்கண்ணன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் நாகராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் சிவலிங்கம், அறநிலையத் துறை ஆய்வாளர் சுகன்யா, மாவட்ட கவுன்சிலர் பிரியாபாண்டியன், அறங்காவலர் குழுத் தலைவர் பிரகாஷ், உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ