உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆதார் இணைக்கப்பட்ட புதிய வங்கி கணக்கு விவாயிகளுக்கு அறிவுறுத்தல்

ஆதார் இணைக்கப்பட்ட புதிய வங்கி கணக்கு விவாயிகளுக்கு அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி: அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சார்பில், ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கை துவங்கி விவசாயிகள் பயன்பெறலாம்.இதுகுறித்து விருத்தாசலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப் செய்திக்குறிப்பு:மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு தவணை முறையில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், மூன்று தவணைகளில் 6,000 ரூபாயை விவசாயிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசு நேரடியாக செலுத்துகிறது.இதற்கு, விவசாயிகளின் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண் மற்றும் மொபைல் எண் இணைப்பது கட்டாயமாகும்.இதற்காக, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சார்பில், போஸ்ட்மேன் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலம், ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கை துவங்க வேண்டும்.ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைத்தல் மற்றும் திருத்தம் செய்தல், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் பதிவு செய்தல் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.பொதுமக்கள் இந்த சேவையைப் பெற அருகில் உள்ள தபால் நிலையம், தபால்காரர் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை