உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசம்பட்டில் 13 ஆண்டிற்கு பிறகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

அரசம்பட்டில் 13 ஆண்டிற்கு பிறகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

சங்கராபுரம்: அரசம்பட்டில் 13 ஆண்டிற்கு பிறகு நேற்று மாரியம்மன் கோவில் தேரோட்டம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த 13 ஆண்டுகளாக தேர் திருவிழா நடக்க வில்லை. இந்நிலையில் ஊராட்சி தலைவர் தரப்பினர் தேர் திருவிழா நடத்த தீர்மானித்து நோட்டீஸ் அடித்து நேற்று தேர் திருவிழா நடத்த ஏற்பாடு செய்து வந்தனர்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உயர்நீதிமன்றம் ஊரில் உள்ள 15 வார்டு உறுப்பினர்களை கொண்டு அமைதியான முறையில் தேர் திருவிழா நடத்த வேண்டும் என, உத்தரவிட்டது.இதையொட்டி நேற்று முன்தினம் ஆர்.டி.ஓ., லுார்துசாமி தலைமையில் இரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதில், சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று காலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வாசன திரவியங்களால் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.மாலை 4:00 மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளசெய்து தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில், இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் உட்பட 250க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை