உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீட்டுப்பணி தொழிலாளர்களை உறுப்பினராக சேர்க்கை; உதவி மையம் தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

வீட்டுப்பணி தொழிலாளர்களை உறுப்பினராக சேர்க்கை; உதவி மையம் தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு வீட்டு பணியாளர்கள் நலவாரியத்தில், வீட்டுப்பணி தொழில்புரியும் பணியாளர்களை உறுப்பினராக சேர்க்க அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பழனி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வீட்டு பணியாளர்கள் நலவாரியம் உட்பட 18 நலவாரியங்கள் தற்போது இயங்கி வருகிறது. இதில் 18 - 60 வயதுக்குட்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்து, கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மற்றும் விபத்து மரணம் உள்ளிட்ட நிதியுதவி கோரி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.இதில், வீட்டுப்பணி தொழில்புரியும் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு வீட்டு பணியாளர்கள் நலவாரியத்தின் கீழ் பதிவு செய்து புதிய உறுப்பினர்களாக சேர்க்க கள்ளக்குறிச்சி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த வீட்டுப்பணி தொழில்புரியும் பணியாளர்கள், ஆதார்அட்டை, குடும்ப அட்டை, வங்கி புத்தகம், புகைப்படம் உள்ளிட்ட அசல் ஆவணங்களுடன் எண்.23/ஏ, தாய் இல்லம், அண்ணாநகர் மெயின்ரோடு, கள்ளக்குறிச்சி-606202 என்ற முகவரியில் இயங்கும், கள்ளக்குறிச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் உள்ள உதவி மையத்தில் சமர்ப்பித்து புதிய உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை