உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இயற்கை பொருட்கள் சந்தை துவக்கம்

இயற்கை பொருட்கள் சந்தை துவக்கம்

சின்னசேலம் : மாநில ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் திட்டம் சார்பில் இயற்கை பொருட்கள் உற்பத்தி விழிப்புணர்வு முகாம் மற்றும் இயற்கை பொருட்கள் விற்பனை சந்தை நேற்று துவங்கியது.சின்னசேலம், மகளிர் திட்ட அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் அருண்குமார் முன்னிலை வகித்தார். வட்டார இயக்க மேலாளர் சுகந்தி வரவேற்றார்.சின்னசேலம் ஒன்றிய துணைச் சேர்மன் அன்புமணி மாறன், இயற்கை சந்தையை திறந்து விற்பனையை துவக்கி வைத்தார்.சந்தையில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், பாரம்பரிய அரிசி, சிறுதானிய உணவுகள், தேன், பனங்கிழங்கு, நாட்டு சர்க்கரை, மண் பாண்ட பொருட்கள், மசாலா பொடிகள், மர செக்கு எண்ணெய்கள், கால்நடை தீவனங்கள், சணல் பை, மஞ்சப்பை மண்புழு உரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விற்பனை நடந்தது.சின்னசேலம் சுற்று வட் டாரங்களைச் சேர்ந்த 20க் கும் மேற்பட்ட கிராமங்களில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை