உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மருந்தாளுனர் சங்க மாநில செயற்குழு

மருந்தாளுனர் சங்க மாநில செயற்குழு

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் அரசு அனைத்து மருந்தாளுனர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.மாநிலத் தலைவர் விஜயகுமரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மலர்கொடி வரவேற்றார். மாவட்ட நிர்வாகி நேரு முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சண்முகம் வேலை அறிக்கை வாசித்தார். மருந்தாளுனர் சங்க மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், மருந்தாளுனர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். சுகாதார துறையில் காலியாக உள்ள 630க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கொரோனா காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !