உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கைலாசநாதர் கோவிலில் உழவாரப் பணி

கைலாசநாதர் கோவிலில் உழவாரப் பணி

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் உழவாரப் பணி நடந்தது.இக்கோவிலில் செங்குறிச்சி மற்றும் பாதுார் ஓம் ஆதிசிவம் திருப்பணி அறக்கட்டளை சார்பில் நடந்த உழவாரப்பணியின் போது, கோவில் வளாகத்தில் உள்ள முட்செடிகள் மற்றும் மண்மேடுகளை அகற்றி துாய்மைப்படுத்தினர்.முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் பிரகாஷ், உறுப்பினர்கள் ரமேஷ் பாபு, சரஸ்வதி, வெங்கடேசன், நகர மன்ற கவுன்சிலர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்