உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

ரிஷிவந்தியம்: அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாட்டில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.ரிஷிவந்தியம், முத்தாம்பிகை அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், மாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதையொட்டி, மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது.தொடர்ந்து, கொடி கம்பத்திற்கு அருகில் உள்ள நந்திபகவானுக்கு பால், தேன், இளநீர், விபூதி உள்ளிட்ட 16 வகை பொருட்களைக் கொண்டு அபிேஷகம் நடந்தது. மேலும், சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு பூஜைகளை, நாகராஜ், சோமு குருக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ