மேலும் செய்திகள்
தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 13 பேர் காயம்
06-Aug-2024
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே தனியார் சொகுசு பஸ் சாலையின் எதிர் திசையில் நின்ற லாரி மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகநாதன் 46. டிரைவரான இவர், தனியார் சொகுசு பஸ்சில் 43 பயணிகளை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி ஒட்டிச் சென்றார். நேற்று காலை 4 மணியளவில் உளுந்தூர்பேட்டை தாலுகா சேந்தமங்கலம் அருகே பஸ் சென்ற போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலியின் சென்டர் மீடியா கட்டை மீது ஏறி எதிர் சாலையில் சாலையோரமாக நின்று இருந்த லாரியின் பின்னால் மோதி கவிழ்ந்தது.இதில் பஸ் டிரைவர் சண்முகநாதன், ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மல்லிகா 30, கணேசன், 50; உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்தனர். உடன் அருகில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்றி உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்துக்குள்ளான பஸ்சை அப்புறப்படுத்தினர்.இது குறித்து திருநாவலுார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
06-Aug-2024