உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பொது விநியோக திட்ட கண்காணிப்பு குழு கூட்டம்

பொது விநியோக திட்ட கண்காணிப்பு குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பொது வினியோக திட்ட கண்கணிப்பு குழுக் கூட்டம் நடந்தது.கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில், மாவட்டத்தில் முழு நேரம் மற்றும் பகுதி நேரமாக செயல்படும் 828 ரேஷன் கடைகள் மூலம், 4 லட்சத்து 43 ஆயிரத்து 547 கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருள் விநியோக செயல்பாடு மற்றும் குறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மேலும், கடைகள் செயல்படும் நேரம், பொருட்களை முறையாக வழங்குதல், விலைப்பட்டியல், பொருட்கள் இருப்பு, தரம் மற்றும் எடை அளவு சரி பார்த்தல், வெளிப்படைத்தன்மை குறித்தும் விவாதிக்கப்பட்டது.தொடர்ந்து, பொதுமக்களுக்கு சரியான எடையில் பொருட்கள் வழங்க வேண்டும்; ரேஷன் கடைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க, அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பொருட்களை அனுப்பும் குடோன்களில் ஆய்வு செய்ய வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.நுகர்வோர் விழிப்புணர்வு சங்க உறுப்பினர்களின் கோரிக்கை, புகார்கள் குறித்து கேட்டறிந்தார்.டி.ஆர்.ஓ., ஜீவா, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ