பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் 438 கோரிக்கை மனு வழங்கல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், 438 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து பல்வேறு வருவாய் துறை நிலப்பட்டா குறைகள், நில அளவை, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா, உதவித் தொகை, மகளிர் உரிமை தொகை உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக 438 கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.தொடர்ந்து மனுக்கள் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வை திறன் மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், பள்ளி பயில்பவர்கள் என 8 மாற்றுத்திறனாளிளுக்கு ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மதிப்பில் திறன் பேசிகள் வழங்கப்பட்டது.டி.ஆர்.ஓ., ஜீவா, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) குப்புசாமி, உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.