| ADDED : ஜூலை 13, 2024 06:21 AM
கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் உள்ள வேங்கோடு ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது.கல்வராயன்மலையில் உள்ள வேங்கோடு ஊராட்சியில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், ஒன்றிய சேர்மன் சந்திரன், துணை சேர்மன் பாச்சாபீ ஜாகிர்உசேன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் கல்யாணி கிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக உதயசூரியன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.முகாமில், பல்வேறு துறைகள் சார்பில் 509 பயனாளிகளுக்கு ரூ 4.21 கோடி மதிப்பில் வன உரிமை சான்று, சாதிச்சான்று, குடும்ப அட்டை, கறவை மாடு, வேளாண் இடுபொருட்கள், நுண்ணீர் பாசன உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பி.டி.ஓ., அய்யப்பன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சின்னத்தம்பி, கிருஷ்ணன், ஊராட்சி தலைவர்கள் ரத்தினம், சின்னப்பொண்ணு சீனிவாசன் உட்பட கட்சி நிர்வாகிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கல்வராயன்மலை தாசில்தார் சோமசுந்தரம் நன்றி கூறினார்.