மேலும் செய்திகள்
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
09-Aug-2024
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் பங்கேற்று மழை நீர் சேகரிப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, மழை நீரின் முக்கியத்துவம், மழைநீர் சேகரிப்பதின் அவசியம் உள்ளிட்ட பல்வேறு வகையான மழைநீர் சேகரிப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஆனந்தன், உதவி நிர்வாக பொறியாளர்கள் ஆத்மலிங்கம், வினோத்ராஜா, ஊராட்சிகளின் உதவி இயக்கனர் நடராஜன், நிலநீர் வல்லுநர் பிரேமா உட்பட பலர் பங்கேற்றனர்.
09-Aug-2024