உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாணவர்களை அச்சுறுத்திய தேனீக்கள் கூடு அகற்றம்

மாணவர்களை அச்சுறுத்திய தேனீக்கள் கூடு அகற்றம்

கள்ளக்குறிச்சி: அகரகோட்டாலத்தில் பள்ளி மாணவர்களை அச்சுறுத்திய தேனீக்கள் கூட்டினை தீயணைப்பு துறையினர் அகற்றினர். கள்ளக்குறிச்சி அடுத்த அகரக்கோட்டாலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தின் மீது தேனீக்கள் கூடு கட்டி பள்ளி மாணவர்களை அச்சுறுத்தி வந்தது. இதனையொட்டி பள்ளி வளாகத்தில் உள்ள தேனீக்கள் கூண்டை பாதுகாப்பாக அகற்றும் பொருட்டு நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்தவுடன், பள்ளி ஆசிரியர்கள் கள்ளக்குறிச்சி தீயணைப்புத் துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் பாதுகாப்பு உடை கவசம் அணிந்து தேனீக்களின் கூண்டை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி