உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஸ்கூட்டியில் புகுந்த பாம்பு மீட்பு

ஸ்கூட்டியில் புகுந்த பாம்பு மீட்பு

கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டியில் புகுந்த பாம்பினை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர், நேற்று காலை சங்கராபுரம் சாலையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தின் முன், தனது ேஹாண்டா ஆக்டிவா ஸ்கூட்டியை (டி.என் 15 எம்.சி 4159) நிறுத்தினார்.அப்போது, ஸ்கூட்டியில் பாம்பு இருப்பதை பார்த்து அங்கிருந்தவர்கள் சத்தமிட்டுள்ளனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையிலான வீரர்கள் சம்பவஇடத்துக்கு சென்று, ஸ்கூட்டியின் இன்ஜின் பகுதியில் இருந்த, 3 அடி நீளம் கொண்ட கொம்பேரிமூக்கன் பாம்பினை மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை