உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விநாயகர் சிலை ஊர்வலம் பாதுகாப்பு குறித்து எஸ்.பி., ஆய்வு

விநாயகர் சிலை ஊர்வலம் பாதுகாப்பு குறித்து எஸ்.பி., ஆய்வு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகளுக்கான பாதுகாப்பு மற்றும் ஊர்வலம் தொடர்பாக எஸ்.பி., நேரில் ஆய்வு செய்தார்.திருக்கோவிலுார் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நாளை திருக்கோவிலுார் பகுதி சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுாரில் உள்ள அல்லி தாமரை ஏரியில் கரைக்கப்பட உள்ளது.இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி., ரஜத் சதுர்வேதி நேரில் ஆய்வு செய்தார்.ஊர்வலம் செல்லும் திருக்கோவிலுாரின் முக்கிய சாலைகள், மணம்பூண்டி, தேவனுார் அல்லி தாமரை ஏரி வரை சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை