உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பள்ளி அருகே வேகத்தடை தேவை

பள்ளி அருகே வேகத்தடை தேவை

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த சாலையில் கலெக்டர், டி.எஸ்.பி., மார்க்கெட் கமிட்டி, அரசு மருத்துவமனை, ஆர்.டி.ஓ., உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இந்த சாலையை ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில், வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன. இதனால் அப்பகுதியில் விபத்து அபாயம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாலையை கடக்கவே, அச்சப்படும் நிலை உள்ளது. அதனால் அங்கு வேகத்தடை அமைக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !