| ADDED : மே 10, 2024 09:11 PM
உளுந்துார்பேட்டை: சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி., மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்இப்பள்ளியில் தேர்வு எழுதிய 91 மாணவ, மாணவியர்களும் தேர்ச்சி அடைந்தனர். மாணவி மனிஷா 491, சாதனாஸ்ரீ 487, கயல்விழி 484 மதிப்பெண் பெற்று முதல் மூன்று சிறப்பிடங்களைப் பிடித்தனர்.கணிதத்தில் 14 மாணவர்கள் 100க்கு100 மதிப்பெண் பெற்றுள்ளனர். ஒரு மாணவர் அறிவியலிலும், ஒரு மாணவி சமூக அறிவியல் பாடத்திலும் 100க்கு100 மதிப்பெண் பெற்றுள்ளார். 450 மதிப்பெண்ணுக்கு மேல் 23 பேர், 400க்கு மேல் 64 பேர் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.பள்ளி முதல்வர் திருவேங்கடம், துணை முதல்வர் ஜெய்கணேஷ் மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் அன்புமணி, இந்திரா, சாந்தி, விஜயா, அருண்மோகன், தமிழரசி, தட்சணாமூர்த்தி, மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர்.