உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மானிய விலையில் பசுந்தாள்; உரம் வேளாண் உதவி இயக்குனர் தகவல்

மானிய விலையில் பசுந்தாள்; உரம் வேளாண் உதவி இயக்குனர் தகவல்

தியாகதுருகம்: தியாகதுருகம் வேளாண்துறை மூலம் பசுந்தாள் உரவிதை மானிய விலையில் வழங்கப்படுகிறது.தியாகதுருகம் வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) வனிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:நிலத்தில் ஒரே பயிரை தொடர்ந்து சாகுபடி செய்வதால் மண்ணில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்பட்டு வளம் குறையும்.அதிக அளவில் ரசாயன உரங்கள், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சு மருந்துகள் பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் குறைந்து மண் மலடாகும்.இதில் பசுந்தாள் உர விதைகளை பயன்படுத்தும் போது வேர்களில் முடிச்சுகளை உருவாக்கி தழைச்சத்தை சேமித்து வைக்கிறது.மேலும் மண்ணின் கரிமத்தன்மை மேம்படுகிறது. நுண்துகள்களை ஏற்படுத்தி நீர் வடிகாலுக்கு வழி செய்து நீர் சேமித்து வைக்கும் திறன் அதிகரிக்கிறது. களைக்கொல்லிகளை கட்டுப்படுத்துகிறது. மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.இதன் பின் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு ஊட்டச்சத்தை அளித்து மகசூலை அதிகரிக்கிறது. இத்தனை பயன் தரும் பசுந்தாள் உரவிதைகள் தியாகதுருகம் வேளாண் அலுவலகத்தில் மானிய விலையில் வழங்கப்படுகிறது.ஒரு ஏக்கருக்கு 20 கிலோ பசுந்தாள் உரவிதைகள் 50 சதவீதம் மானியத்தில் தொகுப்பு முறையில் ஒரு விவசாயிக்கு வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் இதனை வாங்கி பயன்படுத்தி மகசூலை பெருக்கி பயனடையலாம்.இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை