பொறுப்பேற்பு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் டி.எஸ்.பி.,யாக பார்த்திபன் பொறுப்பேற்றுக் கொண்டார்.திருக்கோவிலுார் டி.எஸ்.பி.,யாக இருந்த மனோஜ்குமார், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, ஊத்தங்கரை டி.எஸ்.பி., யாக பணிபுரிந்த பார்த்திபன் நேற்று திருக்கோவிலுார் டி.எஸ்.பி., யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.