உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

ரிஷிவந்தியம்: வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட தாசில்தார் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணிபுரிந்த பாலகுரு, சின்னசேலம் தாலுகா அலுவலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைகள் நில எடுப்பு தனி தாசில்தாராக பணிபுரிந்த வெங்கடேசன், வாணாபும் தாசில்தாராக நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

சங்கராபுரம்

சங்கராபுரம் தாசில்தாராக பணிபுரிந்த சசிகலா கள்ளக்குறிச்சி தென்னக ரயில்வே நில எடுப்பு அலகிற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதில் சின்னசேலத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியாற்றிய விஜயன் சங்கராபுரம் தாசில்தாராக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலால் உதவி ஆணையராக செந்தில்குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய்த் துறையில் கலால் உதவி ஆணையராக பணிபுரிந்த சக்திவேல், கடந்த 2024ம் ஆண்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், விக்கிரவாண்டியில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணிபுரிந்த செந்தில்குமாருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி கலால் உதவி ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று பொறுப்பேற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !