அரசு கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ்த் துறையின் முப்பெரும் விழா
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறையில் முப்பெரும் விழா நடந்தது. சடையம்பட்டு கிராமத்தில் இயங்கும் அரசு கல்லுாரியில் நடந்த முப்பெரும் விழாவிற்கு கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் மோட்ச ஆனந்தன், உதவிப்பேராசிரியர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். மாணவி தேவகி வரவேற்றார்.தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் இளையாப்பிள்ளை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு தமிழ் இலக்கியம் படித்தால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் கல்லுாரியின் அனைத்து துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். மாணவிகள் தமிழ்மொழி, விஜயதர்ஷினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். மாணவர் அய்யனார் நன்றி கூறினார்.