உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் சக்திவேல், பல்வேறு சங்கங்களின் மாவட்ட செயலாளர்கள் ரவி, சாமிதுரை, பொருளாளர் வீரபுத்திரன் முன்னிலை வகித்தனர். கோட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் இந்திரகுமார் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம் சிறப்புரையாற்றினார். இதில் தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியினை தரம் உயர்த்துவதற்கான கோப்பின் மீது ஒப்புதல் வழங்க வேண்டும். நில அளவை பதிவேடுகள் துறையில் நிலுவையில் உள்ள களப் பணியாளர்களின் நிலுவைக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்த்தில் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை