மேலும் செய்திகள்
நாளைய மின்தடை (23.12.2025)
22-Dec-2025
ஆர்.கே.எஸ்., பள்ளியில் நாற்பெரும் விழா
22-Dec-2025
நாளைய மின்தடை கள்ளக்குறிச்சி
22-Dec-2025
இந்து முன்னணி மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி
22-Dec-2025
கள்ளக்குறிச்சி: நீலமங்கலம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு 'பூத் சிலீப்' வழங்கும் பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி(தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய 4 சட்டசபை தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க ஏதுவாக 'பூத் சிலீப்' வழங்கும் பணி நடந்து வருகிறது. ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் தங்களது பகுதியில் வசிக்கும் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, 'பூத் சிலீப்'பினை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், நீலமங்கலம் ஊராட்சியில் 'பூத் சிலீப்' வழங்கும் பணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மூப்பர் தெருவில் வசிக்கும் வாக்காளர்களக்கு 'பூத் சிலிப்'களை வழங்கி, தேர்தலில் அனைவரும் தவறாமல் ஓட்டளித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது, டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், தாசில்தார் பிரபாகரன் உட்பட பலர் உடனிருந்தனர்.கலெக்டர் டென்ஷன்:தொடர்ந்து, நீலமங்கலத்தில் ஓட்டுச்சாவடி மையமாக உள்ள ஊராட்சி அலுவலக கட்டடத்தை கலெக்டர் ஷ்ரவன்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதில், 2 பூத்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள், சிறிய அளவிலான கட்டடத்தில் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது தெரிந்தது. மேலும், ஓட்டுச்சாவடி மையத்திற்குள் செல்வதற்கும், வெளியே வருவதற்கும் ஒரே நுழைவு பகுதி இருப்பதை பார்த்து கலெக்டர் டென்ஷனாகி, வி.ஏ.ஓ., மற்றும் ஊராட்சி செயலாளரை கடிந்து கொண்டார். அப்போது, அனைத்து தேர்தல்களிலும் 2 பூத்களை சேர்ந்த வாக்காளர்கள் ஒரே கட்டடத்தில்தான் ஓட்டளித்து வருகின்றனர் என வி.ஏ.ஓ., தெரிவித்தார். தொடர்ந்து, ஒரு பூத்தினை அருகில் உள்ள அங்கன்வாடி கட்டடத்திற்கு மாற்றுமாறு கலெக்டர் ஷ்ரவன்குமார் அறிவுறுத்தினார்.
22-Dec-2025
22-Dec-2025
22-Dec-2025
22-Dec-2025