பா.ஜ., தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்ற மாவட்ட செயலாளர்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பா.ஜ., மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்ட சதிஷ்குமார், மாநில தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த முனிவாழையை சேர்ந்தவர் சதிஷ்குமார். கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் அருள் பரிந்துரையின் பேரில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, மாவட்ட செயலாளராக சதிஷ்குமாரை நியமனம் செய்துள்ளார். இதனையடுத்து மாவட்ட செயலாளர் சதிஷ்குமார், சென்னையில் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து, விநாயகர் சிலையை நினைவு பரிசாக வழங்கி வாழ்த்து பெற்றார். அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் அருள், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சர்வதேச அரசியல் படிப்பை மேற்கொள்ள லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திற்கு பயில செல்லும் மாநில தலைவர் அண்ணாமலையின் பயணம் வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்தனர்.