உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

பெண்ணை ஏமாற்றிய வாலிபர் கைது

உளுந்துார்பேட்டை : பெண்ணை ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த சிறுபாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் கோபால் 31. பி.இ., பட்டதாரியான இவர், விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவர் 29 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவருடன் உல்லாசமாக இருந்தார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண் கூறவே கோபால் மறுத்துவிட்டார். இதுகுறித்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து கோபாலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை