உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

திருக்கோவிலுார், ; திருக்கோவிலுார் அடுத்த பரனுார் சத்திரம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா நேற்று முன்தினம் நடந்தது.விழாவையொட்டி, குளக்கரையில் சக்தி கரகம் அலங்கரிக்கப்பட்டு, ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது. சிறப்பு வழிபாட்டிற்கு பிறகு திரவுபதி அம்மன் சமேத அர்ஜூனன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கரகத்துடன் வீதியுலா நடந்தது. மாலை 4:00 மணிக்கு சுவாமி கோவிலை அடைந்தவுடன் தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது.தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேர், பக்தர்கள் வடம் பிடிக்க முக்கிய வீதிகளின் வழியாக நிலையை அடைந்தது. இரவு 7:00 மணி அளவில் கரகம் தீக்குண்டத்தில் இறங்க, பக்தர்களும் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, கோவில் நிர்வாகம், பக்தர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை