மேலும் செய்திகள்
குடியிருப்புகளில் உலா வரும் காட்டு மாடுகள்
16-Feb-2025
மூங்கில்துறைப்பட்டு; வடபொன்பரப்பி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடரும் திருட்டால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 30க்கும் மேற்பட்ட கிராமத்திலிருந்து சிகிச்சைக்காக வருகின்றனர். வாரம் ஒரு முறை கர்ப்பிணி பெண்களுக்கு முழு பரிசோதனை முகாம் நடக்கிறது.சுகாதார நிலையத்தில் கண்காணிப்பு கேமரா நல்ல முறையில் இருந்தும் அவற்றினை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் சிகிச்சைக்காக வருபவர்களின் மொபைல் போன், பர்ஸ், பணம் உள்ளிட்டடைகள் அடிக்கடி திருடு போகிறது.கடந்த சில தினங்களுக்கு முன் கர்ப்பிணி ஒருவர் பரிசோதனைக்காக வந்தவரின் மொபைல் போன் திருடு போனது.பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் லோகேஷன் ேஷர் செய்தபோது, அங்கு பணிபுரியும் ஒரு ஊழியரின் வீட்டினை காண்பித்தது. அங்கு சென்று கேட்டபோது தவறுதலாக எடுத்து வந்ததாக கூறியுள்ளார்.இதுபோன்று அவ்வப்போது திருடு போவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், சுகாதார நிலையத்திற்கு வருபவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
16-Feb-2025