மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டி
2 hour(s) ago
கள்ளக்குறிச்சி கோர்ட் முன்பு மனைவியை வெட்டிய கணவர் கைது
18 hour(s) ago
இலவச கண் சிகிச்சை முகாம்
08-Oct-2025
ரயில் மீது ஏறிய நபர்; மின்சாரம் தாக்கி பலி
08-Oct-2025
கள்ளக்குறிச்சி : வருவாய்த்துறையில் 7 தாசில்தார்கள், 13 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்தும், துணை தாசில்தார் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளருக்கு பதவி உயர்வு வழங்கியும் கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணிபுரிந்த கோவிந்தராஜ் பதவி உயர்வு பெற்று, கல்வராயன்மலை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். திருக்கோவிலுார் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் காதர்அலி, உளுந்துார்பேட்டை ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், தேர்தல் தனி தாசில்தார் பசுபதி, கள்ளக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் நளினி, கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர்.உளுந்துார்பேட்டை ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் மணிமேகலை, அதே அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், உளுந்துார்பேட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கண்ணன், திருக்கோவிலுார் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் விஜயபிராபாகரன், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளராகவும், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் நடராஜன், கள்ளக்குறிச்சி பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த இளையராஜாவுக்கு துணை தாசில்தாராக பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் அலுவலகத்தில் ஆ-பிரிவு தலைமை உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர, மாவட்டத்தில் 13 துணை தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
2 hour(s) ago
18 hour(s) ago
08-Oct-2025
08-Oct-2025