உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீடு கட்ட ஆணை வாங்கி தருவதாக கூறி பணம் கேட்பவர்கள் மீது புகார் அளியுங்கள் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆவேசம்

வீடு கட்ட ஆணை வாங்கி தருவதாக கூறி பணம் கேட்பவர்கள் மீது புகார் அளியுங்கள் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., ஆவேசம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஆணை வாங்கித் தருவதாக கூறி பணம் கேட்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான வசந்தம் கார்த்திகேயன் கூறியதாவது:கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தின் கீழ், வீடு இல்லாத ஏழை மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக இலவசமாக வீடு கட்டித்தரப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன்படி, 2024- 25ம் ஆண்டில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஒன்றியங்களில் வசிக்கும் 3,500 பயனாளிகளுக்கு வீடு கட்டித்தரப்பட உள்ளது. ஒவ்வொரு வீடும் 360 சதுர அடி பரப்பளவில், சமையலறை, கழிவறை வசதியுடன் 3.50 லட்சம் செலவில் கட்டப்பட உள்ளது.இதற்காக, மாவட்டத்தில் குடிசை மற்றும் சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள், பட்டா இருந்தும் சொந்தமாக வீடு இல்லாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் தகுதி வாய்ந்த பயனாளிக்கு மட்டுமே வீடு கட்டி தரப்படும்.ஆனால், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், வீடு கட்ட ஆணை வாங்க வேண்டுமென கூறி, யாரேனும் பணம் கேட்டால் பொதுமக்கள் ஒரு ரூபாய் கூட தர வேண்டாம். அவ்வாறு பணம் கேட்பவர்கள் குறித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். இவ்வாறு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ