உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இளநிலை உதவியாளர்களுக்கு பணி ஆணை

இளநிலை உதவியாளர்களுக்கு பணி ஆணை

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் இளநிலை உதவியாளர்களுக்கான, பணி நியமன ஆணையயை கலெக்டர் பிரசாந்த் வழங்கினார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடந்த, குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், 14 பேர், மாவட்ட வருவாய் இளநிலை உதவியாளராக பணிபுரிய தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, கலெக்டர் அலுவலகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்டவைகளில் பணிபுரிய உள்ளனர். இந்நிலையில், இளநிலை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் பிரசாந்த் வழங்கினார். மேலும், அர்ப்பணிப்பு உணர்வுடன் சிறப்பாக பணிபுரிய அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, அலுவலக மேலாளர் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி