மேலும் செய்திகள்
தி.மு.க., நிர்வாகி தாக்கு: போலீஸ் விசாரணை
27-May-2025
திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் அருகே வீட்டின் பூட்டை திறந்து 10 சவரன் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரகண்டநல்லுார் அடுத்த வடகரைதாழனுார் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் சரவணன், 37; கூலித்தொழிலாளி. கடந்த 2ம் தேதி குடும்பத்துடன் வேலைக்கு சென்று மாலை 3:00 மணிக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் உள்ளே இருந்த பீரோ திறக்கப்பட்டு, அதிலிருந்த 10 சவரன் நகை, ரூ.20 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
27-May-2025