உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் 1,031 வாகனங்கள் சோதனை

கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் 1,031 வாகனங்கள் சோதனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்தில் கடந்த 2 தினங்களாக போலீசார் 1,031 வாகனங்களை சோதனை செய்தனர்.கள்ளக்குறிச்சி பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு இரவு நேரத்தில் 3 மணி நேரம் வாகன சோதனையில் ஈடுபட எஸ்.பி., ரஜத்சதுர்வேதி உத்தரவிட்டார்.அதன்பேரில், கள்ளக்குறிச்சி உட்கோட்ட போலீசார், கடந்த 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் இரவு 7:00 மணியில் இருந்து 10:00 மணி வரை பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், 1,031 வாகனங்களை சோதனை செய்ததில், உரிய ஆவணங்கள் இல்லாமல் ஓட்டியது 21 வாகனங்களும், மது அருந்தி ஓட்டியது என 27 வாகனங்களும் பறிமுதல் செய்து அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை