10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஜெயம் மெட்ரிக் பள்ளி சென்டம்
சங்கராபுரம் : சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.இரண்டு பொதுத்தேர்வுகளிலும் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர். 10ம் வகுப்பில் மாணவி அஷிதா 500க்கு 492, ரிசோனா, 491, தேவிகா, 491 மதிப்பெண் பெற்று சிறப்பிடங்களைப் பிடித்துள்ளனர். இதே போல் 12ம் வகுப்பில் மாணவி ரெஹினா 600க்கு 586, நேத்ரா 582, அருணா தேவி 577 மதிப்பெண் பெற்று சிறப்பிடங்களைப் பிடித்துள்ளனர்.சாதனை படைத்த மாணவ, மாணவியர்களை பள்ளி தாளாளர் சந்திரசேகரன், துணைத் தலைவர் மகேந்திரன், செயலாளர் சுகந்தி பட்டுராஜன், துணைச் செயலாளர் பிரபாகரன், பொருளாளர் ரவிசங்கர், இயக்குநர்கள் ஜெயகுமார், ஜெயசக்தி, சமந்தன், கோகுல், ஒருங்கிணைப்பாளர் சாப்ஜான், பள்ளி முதல்வர் சுந்தரபாண்டியன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.