மேலும் செய்திகள்
சேவா பாரதி கல்வி தான மையம் துவக்க விழா
4 minutes ago
ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பால் பரபரப்பு
6 minutes ago
நாளை மின் தடை (09.12.2025)
50 minutes ago
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு
23 hour(s) ago
கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த சுகாதார ஆய்வாளர் கிரேடு 2 பணிக்கான கணினி வழித் தேர்வில் 124 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் கணினி வழி தேர்வு நேற்று நடந்தது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பங்காரம் தனியார் கல்லுாரியில் 70 பேரும், உளுந்துார்பேட்டை தனியார் கல்லுாரியில் 75 பேரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அதில் 124 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 21 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. காலை 9:00 மணி முதல் பகல் 12.15 மணி வரை தேர்வு நடந்தது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நோடல் அலுவலர் மற்றும் பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டு தேர்வு கண்காணிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் தனியார் கல்லுாரி தேர்வு மையத்தில் நடந்த தேர்வினை கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஆர்.டி.ஓ., முருகன், தாசில்தார் பசுபதி ஆகியோர் உடனிருந்தனர்.
4 minutes ago
6 minutes ago
50 minutes ago
23 hour(s) ago