மேலும் செய்திகள்
ஆசிரியர் வீட்டில் 15 சவரன் திருட்டு
15-Sep-2025
கள்ளக்குறிச்சி:ஆலத்துாரில் வீட்டின் கதவை உடைத்து 15 சவரன் நகைகள், 70,000 ரூபாய் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ஏழுமலை, 44; எல்.ஐ.சி., முகவர்; அரிசி கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு ஏழுமலை தன் தாய் பெரியநாயகம், 62; மனைவி ராஜேஸ்வரி, 40; ஆகியோருடன், கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த நல்லுார் கிராமத்திற்கு உறவினர் வீட்டில் நடந்த துக்க நிகழ்வில் பங்கேற்க சென்றார். வீட்டில் தனியாக இருந்த ராமலிங்கம், பின்பக்க கதவை மூடிவிட்டு, முன்புறம் உள்ள வராண்டாவில் துாங்கினார். நள்ளிரவு வீட்டிற்கு வந்த ஏழுமலை மற்றும் குடும்பத்தினர் வீட்டின் மாடியில் துாங்கினர். நேற்று காலை 6:00 மணியளவில் ராமலிங்கம் எழுந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. பீரோவில் இருந்த 15.5 சவரன் நகைகள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தன. கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Sep-2025