மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்றவர் கைது
12-Jun-2025
கள்ளக்குறிச்சி; வரஞ்சரம் அருகே மதுபாட்டில் விற்ற 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, 2 பேரை கைது செய்தனர்.வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, கொங்கராயபாளையம் சுடுகாடு அருகே அதே பகுதியைச் சேர்ந்த செல்வம், 57; இவரது மனைவி கமலாயி, 45; இருவரும் மதுபாட்டில் விற்பனை செய்வது தெரிந்தது. போலீசார் வருவதை பார்த்து கமலாயி தப்பியோடினார். செல்வத்தை கைது செய்த போலீசார் 2 மதுபாட்டிலை பறிமுதல் செய்தனர்.அதேபோல், கொங்கராயபாளையம் ஆற்று பாலம் அருகே மதுபாட்டில் விற்ற தமிழரசன் மகன் பிரவீன்குமார், 29; இவரது தாய் பழனியம்மாள், 45; ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து, பிரவீன்குமாரை கைது செய்தனர். பிரவீன்குமாரிடம் இருந்து 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
12-Jun-2025