உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெட்டிக்கடையில் குட்கா 2 பேர் கைது

பெட்டிக்கடையில் குட்கா 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பெட்டி கடையில் விற்பனைக்காக குட்கா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தண்டலை கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜேந்திரன்,58; திருமூர்த்தி மனைவி சாந்தி,25; ஆகியோர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக பெட்டி கடைகளில், வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்த குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி