போதை மாத்திரை ஊசியுடன் 2 பேர் கைது
திருக்கோவிலுார்: மணம்பூண்டியில் போதை மாத்திரை மற்றும் ஊசியுடன் சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அரகண்டநல்லுார் அடுத்த மணம்பூண்டி மேட்டில் சில இளைஞர்கள் போதை ஊசி போட்டுக் கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், நேற்று முன்தினம் அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த், இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு, போலீசை பார்த்ததும் தப்பியோட முயன்ற 2 பேரை பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து 4 போதை மாத்திரைகள், 2 சிரஞ்கள் இருந்தது. விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் மணிகண்டன், 27; அய்யனார் மகன் சிவப்பிரகாசம், 24; என தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர்.