உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குட்கா கடத்திய 2 பேர் கைது; ஸ்கார்பியோ கார் பறிமுதல்

குட்கா கடத்திய 2 பேர் கைது; ஸ்கார்பியோ கார் பறிமுதல்

கள்ளக்குறிச்சி; தியாகதுருகம் அருகே ஸ்கார்பியோ காரில் 2.76 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தியாகதுருகம் அடுத்த வடதொரசலுார் ரிஷிவந்தியம் பிரிவு சாலையில் இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மகேந்திரா ஸ்கார்பியோ காரை சோதனை செய்தனர். அதில் 2 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பில் குட்கா பொருட்கள் விற்பனைக்காக கடத்திச் சென்றது தெரியவந்தது. உடன், காரில் வந்த சேலம் மாவட்டம், ஆத்துார் ராமநாயக்கன்பாளையம் காட்டுகொட்டயைச் சேர்ந்த முத்துலிங்கம், 33; வாழப்பாடி அடுத்த சேஷாம்சாவடி ஏகாம்பரம், 59; ஆகியய இருவர் மீதும் தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து, ஸ்கார்பியோ காரையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை